நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்; பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டுப் பணியில் அங்கம் வகிப்பது தனது பொறுப்பு என புதிய ஜனாதிபதியாக இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே புதிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஏனைய நாடுகளுடன் இணைந்து உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான தீர்மானங்களை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதற்கு அவர்களின் ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்
நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான முறையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.