அனுர குமார இன்று காலை பதவியேற்பு
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, நாளை (23) திங்கட்கிழமை சுப நேரமாகிய முற்பகல் 9 மணிக்கு, அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்.
பல தோல்விகளுக்குப் பிறகு ஜே.வி.பி. க்கு, இந்த மகத்தான வெற்றி கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல், 21 சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், இதில் கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உட்பட 15 தேர்தல் மாவட்டங்களில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திஸாநாயக்க முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, நுவரெலியா, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றுள்ளார்.
21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், 79.46 வீதமானோர் வாக்களிப்புச் செய்திருந்தனர். இதில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )