உள்நாடு

அநுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்கவேண்டும்

லசந்தவின் மகள் உருக்கமான வேண்டுகோள்

‘சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதி வழங்க வேண்டும்” என, லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அந்த விசேட வேண்டுகோளில், “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக உண்மையைப் பேசியமைக்காக, நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியைப் பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம்.


அதிகாரத்தின் முன்னால் உண்மையைப் பேசியமைக்காக 15 வருடங்களுக்கு முன்னர், நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம்.


15 வருடங்களாகின்ற போதிலும், அந்த வலி வேதனை தொடர்கின்றது. ஆனால், உண்மை பொறுப்புக் கூறலை நிலை நாட்டுவது குறித்து, நான் மிகவும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள், எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது.


நேற்றைய தேர்தல் முடிவுகள், எனது நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளன. ஜேவிபி வரலாற்று ரீதியில் அதிகார வர்க்கத்தினை, கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. இலங்கையின் அண்மைய மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைக் காண்பதில் இந்தப் புதிய தலைமைத்துவம் புதிய நோக்கத்தினைக் கொண்டுவரும் என நான் நம்புகின்றேன்.
எங்களின் துணிச்சலான திறமை மிக்க சிஐடி அதிகாரிகள் சானி அபயசேகர, நிஷாந்த டி சில்வா போன்றவர்களிடம் பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள், எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது.


ராஜபக்ஷவின் பயங்கர ஆட்சியின் கீழ், பயங்கரமான இழப்புக்களைச் சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களுக்கும், நீதியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள அநுர குமார திஸாநாயக்கவை, நாங்கள் வாழ்த்துக்கின்றோம்.


இலங்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலை நாட்டுவதற்காக, நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவுள்ளோம்.


நீதிக்கான பாதை நீளமானது, கடினமானது என்ற போதிலும், எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தைக் கௌரவிப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *