பலாங்கொடை ஜெயிலானிக்கு புதிய அதிபர் நியமனம்
பலாங்கொடை ஜெய்லானி தேசியப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி சுகந்தி இராசரத்தினம் (SLPS) தனது பதவியை வலயக் கல்வி பணிப்பாளர் பிரசாத் விஜேவர்ணசூரிய ஊடாக அதிபர் MJM மன்சூர் இடமிருந்து நேற்றுப் பொறுப்பேற்றார்.
இலங்கை அதிபர் சேவையின் ( SLPS) அதிகாரியான இவர் கல்வி நிர்வாக சேவை (SLEAS) பரீட்சையில் திறமையாக சித்தி அடைந்த விஞ்ஞான பாடத்தில் பயிற்சி பெற்ற கல்விக் கல்லூரி ஆசிரியையுமாவார் (Diploma in Teaching Science)உட்பட( B.ED) உட்பட மேலும் பல தொழில்சார் பட்டப் படிப்புகளை மேற்கொண்டு வருகிறார்்.
அதிபர் பதவியை பொறுப்பேற்கும் வரை உதவி அதிபராகக் கடமையாற்றிய இவர் இப்பாடசாலையின்
தனக்குரிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி பாடசாலை சமூகம் சார்ந்த சகல தரப்பினர்களுடன் இன மத சமூக விழுமியங்களுக்கு மதிப்பளித்து மாணவர்களின் நலன்களில் அதிக அக்கறையுள்ள ஒரு சமூக உணர்வு மிக்க அதிபராக சகலரதும் அபிமானத்தைப் பெற்றவராவார்்.
அவரது பதவிக்காலம் இக்கலாசாலை இழந்த பொற்காலத்தை மீண்டும் மீட்டி தரும் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இப்புனிதமான பொறுப்பை அவரிடம் இச்சமூகம் பொறுப்பளித்துள்ளது. அதிபர் ஆசிரியர்கள் துறை சார்ந்த குழுக்கள் பெற்றார்கள் மாணவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)