அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு இடம்பெற்று வருதாக அநுராதபுர மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ரஞ்சித் விமலசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 7 இலட்சத்து 41 ஆயிரத்து 862 வாக்காளர்கள் ( 7,41,862 ) தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 636 வாக்களிப்பு நிலையங்களும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 95 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு இதில் தபால் மூல வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 35 நிலையங்களும் சாதாரண வாக்குகளை கணக்கெடுப்பதற்காக 60 நிலையங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
மாவட்ட முடிவுகளை அறிவிப்பதற்கும் வாக்கு பதிவுகளை எண்ணும் நடவடிக்கைகளுக்காகவும் அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு பிரதான கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களாக 05 ( (ஐந்து ) பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உரிய அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, பத்தாயிரத்துக்கும் கூடுதலான அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் இம்முறை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)