மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற அஹதிய்யா சம்மேளனங்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல்..!
மாத்தளை மாவட்ட அஹதிய்யா சம்மேளனம் மற்றும் மத்திய அஹதிய்யா சம்மேளனங்களுக் கிடையிலான முக்கிய கலந்துரையாடல் 16 ந்திகதியன்று மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மத்திய மாகாண அஹதிய்யா சம்மேளனத் தலைவர் எம் சரூக் , செயலாளர் எம்.பாஹிம், பொருளாளர் எம். உவைன் மாத்தளை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவரும் பிரதி கல்விப் பணிப்பாளருமான எம்.ராசிக் , செயலாளர் எம்.பயிசல்(நளீமி) , உதவி தலைவர் எஸ்.மரிக்கார் உட்பட சம்மேளன அங்கத்தினர்கள் கலந்துகொண்டதுடன் உக்குவளை அஜ்மீர் வறக்காமுற அன்னூர் , மாத்தளை ஆமினா ஆகிய ஐந்து பாடசாலைகளில் இயங்கிவரும் அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் ஏனைய.பாடசாலைகளின் அதிபர்கள் அங்கத்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வின்போது அஹதிய்யா சம்மேளனத் தலைவர் எம்.சரூக், பொருளாளர் எம். உவைன் ஆகியோர் இன்றைய சூழலில் அஹதிய்யா பாடசாலைகளின் அவசியம் பற்றியும் அவற்றை முன்னெடுத்துச் செல்வது சம்பந்தமாகவும் நீண்டநேர அறிவுரைகளை வழங்கியதையடுத்து மாத்தளை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவரும் பிரதி கல்விப் பணிப்பாளருமான எம்.ராசிக் இயங்காமலிருக்கும் அஹதிய்யா பாடசாலைகளை இயங்கச் செய்வதன் அவசியம் பற்றியும் அதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான தேவையான பயிற்சிநெறிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல் பற்றியும் விடயங்களை எடுத்துகூறினார்
இதனையடுத்து தற்போது இயங்காதுள்ள நிக்ககொல்ல உல்பத்பிட்டிய, குரீவெல , கலேவெல, கொடபொல ஆகிய பகுதி பாடசாலைகளில் அஹதிய்யா பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது அத்துடன் புதிதாக பாடசாலைகளில் அஹதிய்யா பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றிய கலந்துரையாடலொன்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது