ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தேடுப்பதற்கான வாக்களிப்பு ஆரம்பம்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது.
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பரபரப்பான தேர்தலாக இத் தேர்தல் அமைந்துள்ளதால் நாட்டு மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இயன்ற வரை நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை பதிவு செய்யுமாறும் வாக்களித்து விட்டு அமைதி பேண ஒத்துழைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் ஆர் .எம்.ஏ.எல்.கேட்டுக் கொண்டார்.
இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இதன்பொருட்டு 13421 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.1713 மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்களிப்பு பிற்பகல் 4.00 நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு. பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் பிற்பகல் 4.15 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பிற்பகல் 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.