இலங்கையின் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து 340 ஓட்டங்களுக்குள் சுருண்டது
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
நேற்றைய 2ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் 255 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. எவ்வாறாயினும்இ இன்றைய தினம் 3ஆம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி மேலும் 85 ஓட்டங்களை குவித்த நிலையில் 340 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது.
துடுப்பாட்டத்தில் டொம் லாதம் 70 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும், டாரில் மிட்செல் 57 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூரிய நான்கு விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதன்படிஇ நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 35 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 305 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)