உள்நாடு

இளைப்பாறுகிறார் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர்

இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 சிரேஷ்ட நிலை அதிபரான எம்.ஜே.எம்.மன்சூர் நாளை இளைப்பாறுகிறார்.

தான் கற்ற பலாங் கொடை இ/ ஜெயிலானி தேசிய ப் பாடசாலையின் பழைய மாணவரான இவர் ஒரு நல்ல ஆசிரியராகப் பணிபுரிந்து சிறந்த மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப பெரும்பங்காற்றிய ஒரு நல்லாசிரியர். இறுதியாக தனது இறுதிக் காலத்தில் தனது தாய்ப் பாடசாலையான ஜெயிலானியில் அதிபராகவும் அரும் பணியாற்றி நாளை (20) ஓய்வு பெறுகிறார்

அதனை முன்னிட்டு இன்று பாடசாலை பொறுப்புக்களை புதிய அதிபரிடம் ஒப்படைக்கின்றார். சிறந்த கற்றல் திறன்கள் நுட்பங்கள் ஆற்றல்கள் உபாயங்களையும் தன்னகத்தே கொண்ட இவர்
சிறந்த கலைத்திறன்கள் மிக்க தலைசிறந்த ஓவியனாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பிரபலம் பெற்றவர்.

பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றி அனுபவம் மிக்க அதிகாரியாக மிளிர்ந்த இவர் தனது விடாமுயற்சி சவால்களை எதிர் கொண்டு மாணவர் சமூகத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு அதிபராக போற்றப்படுகிறார். இவர் பலாங்கொடையை சேர்ந்த மர்ஹூம் மொகமட் ஜெலீல் தம்பதிகளின் புதல்வரும் இதே பாடசாலை ஆசிரியையான சரீனா மன்சூரின் கணவருமாவார்.

இவரது ஓய்வு காலம் சீரும் சிறப்புமாக தேகாரோக்கியமானதாக அமைய பாடசாலைச் சமூகம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறது.

எம்.டி.எம்.பைரூஸ்
பழைய மாணவர்
வர்த்தகர்

A.A.M.FAIS
Former Principal
R/Jeilani National school
19.9.2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *