உள்நாடு

தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்க வசதி; தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனியார் தொழில் நிறுவனங்கள் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்து சிறுவர்கள் ஆணையாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதற்கிணங்க தொழில் நிறுவனத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்குட்பட்ட தூரம் செல்ல வேண்டிய வாக்காளருக்கு 1/2 நாள் விடுமுறையும் கிலோ மீட்டர் 40-100 தூரம் செல்ல வேண்டிய வாக்காளர்களுக்கு முழு நாள் விடுமுறையும் 100-150 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய வாக்காளருக்கு 1 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தையுடைய வாக்காளர்களுக்கு 2 நாள் விடுமுறையும் வழங்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *