ஐசிசி இன் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீர, வீராங்கணையாக இலங்கையர்கள் தெரிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீர, வீராங்கணைக்கான விருதினை இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லலகேயும், வீராங்கைணயான ஹர்ஷிதா மாதவியும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இந்திய அணியுடன் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக செயற்பட்டதை அடிப்படையாக கொண்டு துனித் வெல்லாலகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜெய்டன் சில்ஸ் ஆகியோர் குறித்த மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு போட்டியிட்டனர்.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான வெல்லாலகே கடந்த ஓகஸ்டில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். மேலும் 1997க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார்.
இதேவேளைஇசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்ஷிதா மாதவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஹர்ஷிதாவின் துடுப்பாட்டம் இலங்கை அணி வெற்றிபெற பெரும் உதவியாக இருந்தது. கடந்த நான்கு மாதங்களால் ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டதில் மூன்று முறை இலங்கை வீராங்கனைகள் விருதை வென்றுள்ளமை விசேட அம்சமாகும். சாமரி அத்தப்பத்து மே மற்றும் ஜூலை மாதங்களில் இந்த விருதை வென்றிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.