உள்நாடு

IMF இடம் தலை வணங்கும் அரசாங்கம் Dolar உழைப்பவர்களை மதிக்கவில்லை; ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே

தொழிலாளர்களின் தயவில் வாழும் தொழிற்சங்க வாதிகள் பல கோடிரூபா பெறுமதியான பல வாகனங்களில் செல்கிறார்கள் தென்னிந்தியாவில் இருந்து நடிகைகளை வரவழைத்து சொகுசு வழங்குகிறார்கள் இளவரசர்கள் போல் வாழ்கிறார்கள் ஆனால் 200 ஆண்டுகளாக வசதியற்ற பழைய லயன் காமராக்களில் வாழும் மக்களுக்கு வசதியான வீடுகள் இல்லை போதுமான சம்பளம் இல்லை அடிப்படை வசதிகள் இல்லை இவர்களின் பிரச்சினைகள் இலகுவாக தீர்க்கப்பட முடியுமானவை ஆனால் இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க தொழிற்சங்க வாதிகளோ ஆட்சியாளர்களோ முன்வருவதில்லை என ஜனாதிபதி வேட்பாளரும் அரகலய செயற்பாட்டளருமான சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ராகல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மிகவும் இலகுவாக தீர்க்க முடியுமான இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எவருமே உணர்வு பூர்வமாக முயற்சி மேற்கொள்ளமையினால் இம் மக்கள் வீதியில் போராட்டம் செய்யும் அவல நிலை தொடர்ந்து நிலவுகிறது.

IMF இடம் டொலர்களை பெறுவதற்கு தலை வணங்கும் ஆட்சியாளர்கள் பல மில்லியன் டொலர்களை நாட்டுக் காக உழைத்து தரும் இத்தொழிலாளர் சமூகத்தை மதிப்பதில்லை. எனவே இம்மக்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்ப்பதற்கு முறையான திட்டங்களை வைத்திருக்கும் எமக்கு முடிந்தவரையில் ஆதரவு தாருங்கள் உங்களை 2 ஆம் தரமாக நினைக்கின்ற வேட்பாளர்களுக்கு வாக்குகளை அள்ளி கொடுப்பதால் நீங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவீர்கள் அதனால் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் ஒரு புதுயுகத்தை அமைக்க எமக்கு ஆதரவு தாருங்கள் அவரவர் சுயநலத்துக்காக குரங்குகள் போன்று கட்சி தாவுகின்ற தலைவர்களுக்கு தொடர்ந்து ஏமாறாது மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும்ஆட்சி அதிகாரத்துக்கு உதவுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *