உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் கல்விக்குழுவுடன் P.E.A அமைப்பு கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் 14.09.2024 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழுவுடன் Puttalam Educationists Association என்ற அமைப்பு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழு தலைவர் அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அவர்களுடன் ஜமிய்யாவின் உறுப்பினர்கள் மற்றும் Puttalam Educationists Association தலைவர் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலையின் அதிபர் இல்ஹாம் அவர்கள் , செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இக்கலந்துரையாடலில் புத்தளம் சமூகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்காக அனைத்து திட்டங்களும் தாங்களிடம் உள்ளதாகவும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் தாங்கள் இணைந்து பயணிப்பதாகவும் தெரிவித்தனர்.

சமூகம் சார்ந்த பல சேவைகள் செய்யும் இக்குழுவை அல்லாஹ்தாஆலா கபூல் செய்வானாக.

கல்வி உபக்குழு தலைவர்
அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *