தேசிய அங்கீகார விருதைப் பெற்ற பாத்திமா நுஹா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை ஆகிய இரண்டும் இணைந்து இலங்கையிலுள்ள பல்துறை கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (2024-09-16) அன்று, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதில், பல்துறை கலைஞர்களுக்கு தேசிய அங்கீகாரம் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
பேருவளையைச் சேர்ந்த, முஹம்மத் நிஸார் பாத்திமா நுஹா “கலைநிலா” லங்கா புத்ர, தேசபந்து எனும் நாமம் சூடிய தேசிய கெளரவ விருதை வழங்கி கெளரவிக்கப்பட்டார். இதை இவர் இளம் வயதிலேயே இவ்வாறான ஒரு கெளரவ நாமத்தை பெற்று கொண்டுள்ளார்.
மேலும், பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரும், களு/ நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், முஹம்மத் நிஸார் பாத்திமா ஸுஹதா அவர்களின் புதல்வியும் ஆவார்.
இவர், பேருவளை நியூஸ் குழுமத்தின் ஊடாக, பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதோடு, சென்ற வருடமும், இந்த வருடமும் இளம் சமூக ஆர்வலர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
மேலும், இவ்விருது வழங்கும் வைபவத்திற்கு, சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயலாளர், ஐக்கிய மக்கள் உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம் முக்தார்)