கடந்த ஆறு மாத காலத்தில் அனுராதபுரத்தில் 491 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் அனுராதபுரம் மாவட்டத்திலுருந்து சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 491 முறைமைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட சிறுவர் காப்புறுதி அதிகாரி மஹேந்திர தஸநாயக்க தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் ஊடக நெறிமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவூட்டும் சேயலமர்வு அண்மையில் அனுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்ட சிறுவர் காப்புறுதி உத்தியோகத்தர் இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்:- இந்தக் காலப் பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பபாக சிறுவர் நலச் சேவை இலக்கம் 1929 க்கு 202 முறைப்பாடுகளும் மாவட்ட பிரதேச அதிகாரிகளுக்கு 289 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தவிர நன்னடத்தை திணைக்களத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பில் 464 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் சிறுவர் முதலீட்டு முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் சட்ட உதவி ஆணைக்குழு மாகாண நன்னடத்தை திணைக்களம் ஆகியவற்றுக்கு முறைமைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)