விளையாட்டு

நியூஸிலாந்து அணியை எதிர்த்தாடும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி இன்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இடம்பெறவுள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான நியூஸிலாந்து அணி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இலங்கை ந்தடைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் நியூஸிலாந்து அணியின் புதிய சுழற்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் பொறுப்பேற்று நியூஸிலாந்து அணி எதிர்கொள்ளும் முதல் தொடர் இதுவாகும்.

அதற்கமைய இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை மறுதினம் செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேலும் இத் தொடருக்கான தனஞ்சய டி சில்வா தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதில் இறுதியாக இலங்கை அணி பங்கேற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற அதிகமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க விலக்கப்பட்டு அவருக்கு பதிலான நியூஸிலாந்து தொடருக்கு துடுப்பாட்ட வீரரான ஒஷத பெர்ணான்டோ இணைக்கப்பட்டுள்ளார். ஏனைய வீரர்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விவரம் வருமாறு,

தனஞ்சய டி சில்வா (தலைவர்)
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ்
தினேஷ் சந்திமால்
கமிந்து மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
ஓஷத பெர்னாண்டோ
அசித பெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார
பிரபாத் ஜெயசூர்ய
ரமேஷ் மெண்டிஸ்
ஜெஃப்ரி வெண்டஸே
மிலன் ரத்நாயக்க

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *