அன்னல் நபியின் வழியில்ஜனநாயகத்தை காப்போம்..! -மீலாத் தின செய்தியில் எம்.எச். அப்துல் ஹலீம்
நாட்டில் ஜனநாயத்தை மீறி சர்வாதிகார போக்கு மேலோங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையல் அன்னல் நபியின் சிறந்த ஆட்சி முறை மூலமான அழகிய வழிகாட்டல்கள் மூலம் நாம் ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
முன்னால் அமைச்சர் ஹலீம் விடுத்துள்ள மீலாத் தின செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அகிழத்துக்கு அருட்கொடையாய் வந்துதித்த அன்னல் நபியின் பிறந்த தினம் மற்றும் அவர்கள் இவ்வுலகை விட்டு பிறிந்த தினமும் இன்றாகும். இன்று நாடெங்கிலும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றி பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அத்துடன் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையால் அரசாங்கம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜனநாயத்தை உலகுக்கு எடுத்துறைத்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆட்சி முறை பற்றி நாம் மீட்டிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
முஹம்மது நபியவர்கள் உலகின் சிறந்த தலைவராக வாழ்ந்து எமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளமையை அவரது தலைமைத்துவ வழிகாட்டல்கள் எடுத்துறைக்கின்றன. அதன்காரணமாகவே இன்று உலகம் முழுதும் இஸ்லாம் வியாபித்து சமாதானத்தை எடுத்துறைக்கிறது.
அல் குர்ஆனை யாப்பாகக்கொண்டு நாம் எமது அடிப்படை கடமைகளை நிறைவேற்றி வருகின்றறோம். அத்துதோடு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையான சுன்னாவையும் அனுவனுவாக பின்பற்றி வருகிறோம். அதுபோல இலங்கை நாட்டில் எமது அரசியல் யாப்பின் அடிப்படையிலும் இருந்துகொள்ளவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிம்மின் மீதும் இருக்கிறது. அதுபோன்றே அரசியல் யாப்புக்கு புரம்பாக அல்லது அதனை மதிக்காது ஜனநாயத்திற்கு விரோதமாக செயற்படுபவர்களை எதிர்ப்பதும் கட்டயமானதாகும் என தெரிவித்துள்ளார்