முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம் பெற்றது.
பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ, கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட பலரும் உரையாற்றினர்.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை பேருவளை தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் மேலும் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களுத்துறை மாவட்டத்தில் கூடுதலான முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரூஸ் அஸாத் தெரிவித்தார்.



(பேருவளை பீ.எம் முக்தார்)