உள்நாடு

புதிய புலனாய்வு தகவல்களின்படி சஜித் பிரேமதாச 50 வீத வாக்குகளைப் பெறும் அளவில் முன்னணியில் உள்ளார்

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பீ.உறுதி.

தற்போதைய புலனாய்வுப் பிரிவின் தகவலின்படி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐம்பது விகிதம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வகையில் முன்னணியில் திகிழ்கின்றார். இதில் போட்டியிடக் கூடிய சகலருக்கும் இத்தகவல்கள் பகிரங்கமான முறையில் கிடைக்கப் பெற்று இருக்க வேண்டும். என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


கண்டி ஓக்ரோ ஹோட்டலில் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் போது கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
புதிய தகவல் மதிப்பீட்டின்படி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நூற்றுக்கு ஐம்பது விகிதம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னிலையில் திகழ்வதாக உத்தியோகபூhவமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது பற்றி புலனாய்வுத் துறையின் ஊடாக அந்தந்த கட்சிகளுக்கு பகிரங்கமான முறையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நான்கு யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதைச் சொல்வதற்கு யாரும் அச்சப்பட தேவையில்லை. விடேசமாக சொல்வதனால் மூன்று நான்கு இடத்தில் உள்ள வேட்பாளர்களை போட்டியில் இருந்து கேட்;டு விலகிக் கொள்ளுமாறு சர்வதேச தேர்தல் ஆய்வு மதிப்பீட்டு நிறுவனங்கள் கூட கோரிக்கை விடுத்துள்ளன.


விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவதற்காக .எமது ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். எனினும் தான் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு வருவோம் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இப்படியான நிலையில் கூட அவர் ஓட்டத்தில் உள்ளார். அவர் இந்த ஓட்டப் போட்டியில் இருப்பது வெற்றிபெறுவதற்கு அல்ல. அவருடைய முழு நோக்கமும் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை அதிகளவு பெற்று சஜித் பிரேமதாச அவர்களை தோல்வியடையச் செய்து அநுர குமார திசாநாயகவை வெற்றி பெறச் செய்வதாகும். இவற்றை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். இது தான் உண்மை.


எந்த வேட்பாளராக இருந்தாலும் நான் வெற்றியடைவேன் என்றுதான் கூறுவார்கள். தான் தோல்வியடைவேன் என்று கூறுவதில்லை.


நான்கரை வருடம் பொதுசன ஆட்சியினால் நாடு வங்குரோத்து அடைந்து மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். நாட்டைச் செய்வதற்குப் பணமில்லை. இதனால் அத்தியவசியப் பொருட்களின் விலை மூன்று மடங்களுக்காக அதிகரித்தன. மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு சிக்குண்டார்கள். ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பொதுஜனப் பெரமுனவினால் வங்குரோத்து அடைந்த நாட்டை சீரமைகக்க மூன்றரை வருடங்கள் இருந்தன. அதை அவர் செய்ய வில்லை. ஐக்கிய தேசிய கட்சியினால் செய்ய முடியவில்லை. சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது புதிய ஆட்சியாகும். இலங்கைக்கு புதிய ஆட்சியால் புதிய திட்டத்தை ஆரம்பிக்க முடியும். மூன்று நேரம் சாப்பிடுவதற்கு கூட மக்கள் கஷ்டனமான நிலையில் இருந்தார்கள். நாட்டு மக்களது வாழ்வாதார நிலையைப் பொறுத்துத் தான் தேர்தல் தீர்ப்புகள் அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *