உள்நாடு

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டங்கள் கூறுவது என்ன மற்றும் செலவுகள் பற்றிய தெளிவூட்டும் செயலமர்வு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிறு (15) புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேர்தல் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, இலங்கை பத்திரிகையாளர் பேரவையின் பணிப்பாளர் நாயகம் திலீப் சந்தன கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளரும் அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாகவும் பின்னிப்பினைந்ததாகவே இன்று காணப்படுகின்றது. மேலும் இன்றைய தேர்தல் மேடைகளில் பிரதான கட்சித் தலைவர்களின் சில பேச்சுக்கள் இலங்கை அரசியலை கேள்விக்குறியாக இதுவா இலங்கையின் அரசியல் என்ற கேள்வி எழுவதாக தேர்தல் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க செயலமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேற்படி செயலமர்வில் புத்தளம் மாவட்டதில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளில் உயர் தரத்தில் அரசியல் பாடம் கற்கும் மாணவிகள் சிலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *