விளையாட்டு

லிவிங்ஸ்டனின் சகலதுறை அசத்தலால் ஆஸியை விரட்டியடித்த இங்கிலாந்து

அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் 2ஆது போட்டியில் லிவிங்ட்டனின் அதிரடித் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1:1 என சமநிலை செய்துள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கொண்ட இருவகை தொடர் ஆரம்பித்துள்ளது. அதில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ரி20 போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது. இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 2ஆவது போட்டி நேற்று கார்டிபில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஜெக் ப்ரஸர் 50 ஓட்டங்களையும், ஜோஸ் இங்லிஸ் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்துவீச்சில் பிரிடன் க்ரேஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் 194 என்ற மிகச் சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் பந்துவீச்சில் அசத்திய லிவிங்ஸ்டன் 47 பந்துகளில் 87 ஓட்டங்களையும், பெச்சல் 24 பந்துகளில் 44 ஓட்டங்களையும் விளாசிக் கொடுத்தனர். பந்துவீச்சில் மெத்யூவ் சோர்ட் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இப்போட்டியின் நாயகனாக சகலதுறையில் பிரகாசித்த லிவிங்ஸ்டன் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் தொடரைடி 1:1 என சமன் செய்தது இங்கிலாந்து. அதற்கமைய தொடரை தீர்மாணிக்கும் 3ஆவதும், இறுதியுமான போட்டி நாளை (15) மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *