கண்டியின் பிரபல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் மற்றும் பிரபலங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு..!
கண்டியில் பிரல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் தலைமையில் ஜனாதிபதி வேட்பார் சஜித் பிரேமதாச அவர்களை வெற்றியை உறுதி செய்யும் வகையில் கண்டியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் இணைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் அதற்காக நாம் சஜித் பிரேமதாச அவர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பார் லக்~;மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் பிரபல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து கண்டியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் இணைந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கண்டி ஓக்ரோ ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் நாட்டில் கலந்து கொண்ட கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பார் லக்~;மன் கிரியெல்ல இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் எல்லா மக்களுடைய தேவைகளை அங்கீகரிக்கின்ற கட்சியாகும். சிங்கள பௌத்த சமய கலாசார உரிமைகளைப் பாதுகாப்பது போன்று எல்லா இனத்தவர்களையும் சமமான முறையில் முஸ்லிம், தமிழ் , கிறிஸ்தவ மக்களுடைய உரிமைகளையும் மதித்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் கட்சியாகும்.
சஜித் பிரேமதாச அவர்கள் கடந்த கொரோனா காலத்தில் உரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களை தகனம் செய்யும் விடயத்தில் பாராளுமுன்றத்திலும் அதற்கு வெளியேயும் பரந்த மட்டத்தில் அவர்களுடைய உடல்கள் அடக்கம் செய்ய வேண்டும் என்;று உரையாற்றியவர். இதுதான் கண்டி அரசர்களுடைய முன்மாதரியான விடயங்களும் ஆகும். கண்டியை ஆட்சி செய்த சகல மன்னர்களுடைய செயற்பாடுகள் இவைகளே. . சகல இனங்களையும் சமமான முறையில் கௌரவித்து வழிநடத்தினார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யட்டிநுவர பிரதேச முன்னாள் உறுப்பினர் வஸீர் கருத்து தெரிவிக்கும் போது
ஐக்கிய மக்கள் சக்தியினை ஆதரிப்பதற்கான முக்கிய காரணம் எமது நாட்டையும் மக்களையும் மையமாக வைத்து இணைந்து கொண்டேன் ஒரு சுவீட்சமான நாடாக மாற்றியமைக்கக் கூடிய உறுதியான சிறந்த கொள்கைத் திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடமே அமைந்துள்ளன. ஆதனால்தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இணைந்துள்ளோம் என்று முன்னாள் யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் வஸீர் முக்தார் தெரிவித்தார்.
இதில் கண்டியிலுள்ள வர்த்தகப் பிரமுகாகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூகப் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)