விளையாட்டு

கிரிக்கெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுற்றுலா நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை மைதானத்தில் நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷித் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் நிலையில்இ இரண்டாவது போட்டியானது 26ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு இவ்வாறு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் டெஸட் போட்டி 18ஆம் திகதி ஆரம்பிக்கும் நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெருவதனால் அத்தினத்தில் போட்டி இடம்பெறாது என்றும் 23ஆம் திகதியே போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் இடம்பெறும் என்பதும் குறிப்பி-டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *