ரியல் மெட்ரிட் கழகம் தான் உலகின் மிகச்சிறந்த கழகம்; ரொனால்டோ புகழாரம்
ஸ்பெய்னின் ரியல்மெட்ரிட் தான் மிகச் சிறந்த மிகச் சிறந்த உதைப்பந்தாட்டக் கழகம் என்று நட்சத்திர உதைப்பந்தாட்ட ஜாம்பவானான கிரிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு தனது கருத்தினை வெளிப்படுத்திய போது, ரியல்மெட்ரிட் கழகம்தான் உலகிலே மிகச்சிறந்த உதைப்பந்தாட்டக் கழகம் என புகழாரம் சூட்டினார்.
தற்போது சவுதி அரேபியாவின் அல்நசர் கழகனத்தின் தலைவரான இருக்கும் ரொனால்டோ, ரியல் மெட்ரிட் கழகத்தில் விளையாடிய காலத்தில் ஐந்து ஐரோப்பிய சம்பியன் லீக் கிண்ணத்தையும், பல முறை லா லீகா வெற்றிகளையும் பெற்றிருந்தார்.
ரொனால்டோ 2009 முதல் 2018 வரை ரியல் மெட்ரிட் கழகத்துக்காக விளையாடி, அந்நாட்டின் மிக முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்ந்தார். அவரது விளையாட்டு திறமையும் அணிக்கு கொண்டுவந்த வெற்றிகளும் ரியல் மெட்ரிட் கழகத்தை உலகின் மிகச் சிறந்த அணி எனப் பாராட்டக் காரணமாக இருந்தன.
ரொனால்டோ தனது ரியல் மெட்ரிட் அனுபவத்தை சிறந்த காலங்கள் என்று விவரித்தார். அவருடைய மொத்த கோல்களில் ரியல் மெட்ரிட் அணியில் மட்டும் 450க்கும் மேற்பட்ட கோல்களை அவர் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.