“இலங்கை தேசத்தின் எழுச்சிக்கான தேசிய மூலோபாய வேலைத்திட்டத்தினை முன் வைத்துள்ள வித்தியாசமான மனிதர் திலித் ஜயவீர”
சரோஜன் அதிகாரத்தின் சிறுபான்மை சமூகங்களுக்கான பிரிவின் தலைவர் சட்டத்தரணி. சாத்ஹுல் அமீனுடனான நேர்காணல்…
இனம் மதம் மொழி கடந்து தேசத்தையும் தேச மக்களையும் நேசிக்கும் ஒரே தலைவராக; மனித பண்பு நிறைந்த மனிதராக திகழ்பவர் தான் சர்வஜன அதிகாரத்தில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் திலித் ஜயவீர என தாயக மக்கள் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், அக்கட்சியின் சிறுபான்மை சமூகத்தின் பிரிவுத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.டபிள்யூ. சாத்ஹுல் அமீன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் சிந்திக்கத் தூண்டும் ஒரு தலைவராக இருக்கும் திலித் ஜயவீரவின் இலக்கு இலட்சியம் தூர நோக்கு குறித்தும் சர்வஜன அதிகாரத்தின் விரிவான மேலோபாயத் திட்டம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் நேர்காணலிலேயே சட்டத்தரணி சாத்ஹுல் அமீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வஜன அதிகாரத்தால் வெளியிடப்பட்டுள்ள தேசிய மூலோ பாயத் திட்டம் குறித்து தெளிவுபடுத்துமாறு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் நீண்ட விளக்கங்களை எடுத்துரைத்தார்.
கேள்வி: சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் முதலில் விளக்கம் அளிப்பீர்களா?
பதில்: முதலில் ஒன்றை கூற விரும்புகிறேன். இது ஒரு விஞ்ஞாபனம் அல்ல. பத்தோடு பதினொன்றாக ஒரு விஞ்ஞாபனத்தை நாம் நாட்டு மக்களுக்கு வழங்க முன் வரவில்லை . இது எமது வேட்பாளரான திலித் ஜயவீரவின் நீண்ட கால இலக்குகளை கொண்டதொரு தேசிய மேலோபாய வேலைத்திட்டமாகும். மேலும் இது ஜனாதிபதி தேர்தலோடு மடித்து வைக்கப்படும் அறிக்கையல்ல. இது நீண்டகால வேலைத்திட்டமாகும். அவரது இலக்கை நோக்கிய பயணம் வித்தியாசமானது.
சுதந்திர நாட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கைகளை தொலைத்து நிற்கும் இந்த நேரத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிந்தித்த அவர் 10 அடிப்படை உடன்படிக்கைகளை உள்வாங்கி சர்வஜன சாசனத்தை வரைந்தெடுத்தார். அனைத்து இன மக்களையும் உள்வாங்கி நமக்காக நாம் என்ற தாரக மந்திரத்துடன் தனது பணியை ஆரம்பித்தார். அதன் அடிப்படையிலேயே இந்த தேசிய மூலோபாய வேலைத்திட்டத்தினை முன் வைத்துள்ளார். இது தேர்தல் விஞ்ஞாபனமல்ல; எல்லா காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு சாசனமாகும்.
கேள்வி: நாட்டின் மிகப்பெரிய தேர்தல் ஒன்று நடைபெறப் போகும் இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான ஒரு வேலை திட்டத்தை முன் வைத்திருப்பது தேர்தலை நோக்கமாகக் கொண்டதா?
பதில்: கேள்வி நியாயமானது தான். ஆனால் அதுதான் முற்றுமுழுதான நியாயமான இந்த தேசிய வேலை திட்டம் இன்று அவரது மனதில் உருவானதல்ல. தனது பல்கலைக்கழக படிப்புக் காலத்தில் உதித்ததாகும். இதை நான் நன்கு அறிவேன். அவர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்ட போது அவரது சக தோழனாக நெருங்கி செயல்பட முடிந்தது. அந்த இளம்பருவத்திலேயே அவருடைய உள்ளத்தில் புரையோடி போன விடயங்களே இவை.
தேர்தலில் வெற்றி தோல்விக்கு அப்பால் நாட்டையும் மக்களையும் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடு இந்த தேசிய மேலோபாயத்திட்டமாகும். தேர்தலுக்குப் பின்னரும் இந்த வேலை திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் அவரும் அவரது அணியும் உறுதி பூண்டிருக்கின்றனர். ஒன்றுபட்ட நாட்டை நோக்கி அணிவகுத்து நிற்பதற்கான நம்பிக்கையை வளர்த்து மக்கள் மனங்களை உயிர்ப்பிக்கும் பொறுப்பை தன்னுள்ளத்தில் பதித்துக் கொண்டே இப் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கேள்வி: திலித்தின் இந்த இலட்சியம் மிக்க சவால் மிக்கது என்பதை உணரவில்லையா?
பதில்: சவால்களை கண்டு அஞ்சும் ஒருவராக எம்மால் அவரை பார்க்க முடியாது. அவருக்கு சவால் என்பது புதிதல்ல. எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றிப் படிகளில் ஏறி வருபவர். ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்குள் தன்னை ஆட்படுத்தி கொண்டவர். ஒரு படைப்பாற்றல் கொண்ட சிந்தனையாளராகவே அவரை எம்மால் பார்க்க முடிகிறது. அவர் ஏறி வந்த படிக்கட்டுகள் ஒன்றல்ல; இரண்டல்ல; அவற்றை தாண்டி படியேறும் மன உறுதியை அவரிடம் காண முடிகிறது.
57 வது வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் அவர் தன்னால் முடியும் என்ற மன உறுதி கொண்டவராகவே இந்த பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபராவும் அறிவார்ந்த சிந்தனையாளராகவும் அவர் காணப்படுகிறார். தான் முன் வைத்த காலை வெற்றி இலக்கை அடையும் வரை பின் வைக்காத ஒருவராகவே அவரை பார்க்க முடிகிறது அவசரப்படாத கனத்த இதயம் கொண்டவர் அதே சமயம் இனிய மனதை கொண்டவரும் கூட என்பதை சொல்லி வைக்க வேண்டும்.
கேள்வி: சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் குறித்த சர்வஜன அதிகாரத…
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரம் அடைந்துள்ளன.
பொதுக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், நேரடி சந்திப்புகள் மற்றும் பலவிதமான சமூக ஊடகங்களை பயன்படுத்தியும் பிரச்சாரங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சமூக ஊடகங்கள் விரைவாக மக்களை அடைவதனால் அபேட்சகர்களின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் கூடுதலான ஈடுபாட்டை காட்டுகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி பிரச்சாரங்களை மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் மெத்திகா விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் அபேட்சகர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளதாக இருவரது புகைப்படங்களையுமிட்டு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. குறித்த புகைப்படத்தில் இருவரும் கைகுலுக்குவது போன்ற படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் மத்தியில் சஜித் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த செய்தி பகிரப்பட்டுவந்தமை தெரிய வந்துள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் மெத்திகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் ஒருபோதும் சஜித் பிரேமதாசவே சந்தித்ததே இல்லை என அவர் தெரிவித்தார். இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படம் 26.03.2024 ம் திகதியில் தேசிய அடிப்படை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டதாகும். அந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இடம் பெற்றிருந்த புகைப்படமே இந்த போலி பதிவுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி மேலும் தேடிப் பார்த்தபோது இச்செய்தி உண்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சகல அமைச்சர்கள் தொடர்பாகவும் இவ்வாறான சில போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மக்களை தவறான வழியில் திசை திருப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். தேர்தல் காலங்களில் இவ்வாறான போலிச் செய்திகள் அடிக்கடி வெளிவரும் என்பதால் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டியது வாசகர்களின் தலையாய கடமையாக இருக்கிறது.
(நேர்காணல்: எம்.ஏ.எம்.நிலாம்)