விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்கள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைக்கு வந்திருக்க புதிய டெஸ்ட் தரவரிசை நேற்றைய தினம் வளியிடப்பட்டது. அதில் இலங்கையின் வீரர்கள் தமது சிறந்த தரநிலையை பெற்றுள்ளனர்.

அண்மையில் முடிவுற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என வெற்றி கொண்டிருந்தது. இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகயளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 10 ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்தை வெற்றி கொண்டிருந்தது.

இதன்போது அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, பத்தும் நிசங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினர். இதில் முதல் இன்னிங்ஸில் 69 ஓட்டங்களைப் பெற்ற தனஞ்சய டி சில்வா டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 13 ஆவது இடத்தைப் பிடித்தார்.

அத்துடன் 3ஆவதும் இறுதியுமான டெஸ்டில் இலங்கைக்கு வரலாற்று வெற்றியைப் பெற சதம் விளாசி துணைநின்ற பெத்தும் நிசங்க 42 இடங்கள் முன்னேறி 39ஆவது இடத்தினைப் பெற்றுக் கொண்டார்.மேலும் இத்தொடரில் அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் ஆறு இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்தைப் பிடித்தார்.

அதேபோன்று இலங்கையின் மேலும் மூன்று வீரர்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளனர். ஓவல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய விஷ்வ பெர்னாண்டோ 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 31 ஆவது இடத்தைப் பிடித்தார். சக வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார 10 இடங்கள் ஏற்றம் கண்டு 32 ஆவது இடத்தைப் பிடித்ததோடு மிலான் ரத்னாயக்க 26 இடங்கள் முன்னேறி 84 ஆவது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *