2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “அமைதியானதொரு தேர்தலுக்காக” என்ற கருப்பொருளில் கஃபே அமைப்பின் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள்
“அமைதியானதொரு தேர்தல் “என்ற என்ற கருப்பொருளுடன் கஃபே அமைப்பினால் நேற்று முன்தினம் (08.09.2024) தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி நேற்று தென்மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் , மாத்தறை மாவட்டத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான திரு. மனாஸ் மக்கின் அவர்கள் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கஃபே அமைப்புக்கு இதுவரை 880 தேர்தல் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானதும், அத்துடன் தேர்தல் வன்முறை சம்பவங்கள் மிகக்குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல போக்காக கருதப்படுகிறது. எனினும் முகநூல், வாட்ஸஅப், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்பூட்டும் பேச்சுகள், பொய்யான பதிவுகள் மற்றும் பொய்யான காணொளிகள் போன்றவற்றின் பரிமாற்றம் பெருமளவில் அதிகரிப்பதனால் இவை எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு காரணமாக அமையலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுவாக, முந்தைய தேர்தல்களுடன் மேற்கொண்ட அவதானிப்புகளின் படி, பெரும்பாலும் அடிமட்ட உறுப்பினர்களிடையே சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான பிரச்சாரங்கள் அதிகரிக்கின்ற போது எதிர்காலத்தில் வன்முறைகள் இடம்பெருவதற்கு காணப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இவ்வாறான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் பிரதேச அரசியல்வாதிகள், பெண் உல்லூராட்ச்சி உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் மூலம் “அமைதியானதொரு தேர்தல்” என்ற பெயரில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் தென் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கபட்டன. தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் ஏனைய மாகாணங்களில் இந்நிகழ்ச்சியை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திரு. மனாஸ் மக்கின்
கஃபே அமைப்பின்நிறைவேற்று பணிப்பாளர்