முஸ்லிம் இளைஞர் ஒருவர் பாணந்துறை கடலில் காணாமல் போயுள்ளார்..!
பாணந்துறை நகர்ப்புற கடற்கரையில் பொழுதுபோக்குக்காக கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் குழுவில் கடல் அலையில் சிக்குண்டு காணாமல்போன இருவரில் ஒருவர் பாணந்துறை உயிர் காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் கடந்த ஞாயிறு மாலை முதல் காணமல் போயுள்ளார்.
பாணந்துறை கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு எதிராக உள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) மாலை நேரத்தில் பொழுது போக்குக்காக நீராடச்சென்ற இளைஞர் குழுவைச் சேர்ந்த வேறவத்த பகுதியைச் சேர்ந்த எம்.ரிஹான்-23வயது இளைஞர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் மற்றும் உயிர்காப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகளினால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காப்பாற்றியுள்ளதுடன் மற்ற் இளைஞர் கடல் அலையில் சிக்கி ஒரேயடியாக காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.காப்பாற்றப்பட்டவர் முதலுதவி அளிக்கப்பட்டால் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞர் இன்று (9) திங்கட்கிழமை காலை வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(காணாமல் போன இளைஞரின் படம் இணைக்கப்பட்டுள்ளது)
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)