Wednesday, August 13, 2025
Latest:
உலகம்

இன்று தாய்லாந்து புறப்பட்ட இலங்கை தேசிய இளையோர் muay Thai அணியினர்.

எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள உலக முஆய் தாய் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக 30 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியினர் இன்றிரவு தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

120 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் இப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையிலிருந்து புறப்படுச் செல்லும் 30 பேர் கொண்ட அணியில் கஹட்டோவிட்ட கிராமத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸுமர் தில்ஷாத், பதாஹ் நூர் முஹம்மத், அஸ்மால் அஷ்ரப் அலி ஆகிய மூன்று வீரர்களும் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்ததன் மூலம் தாய்லாந்து போட்டித் தொடருக்கு இம் மூன்று வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *