சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் இங்கிலாந்தின் மொயின் அலி
இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில்இ தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ரி20 உலகக் கிண்ண தொடரில் ஜூன் 27ஆம் திகதி கயானாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் கடைசியாக விளையாடியிருந்தார்.
37 வயதான மொயின் முனிர் அலி இங்கிலாந்து அணிக்காக 68 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 3094 ஓட்டங்களையும், 204 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். துடுப்பாட்டத்தில் 5 சதங்கள் மற்றும் 15 அரைச்சதங்களுடன் 155 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் 10 விக்கெட்டுக்கள் பிரதியை 1 முறையும், 5 விக்கெட்டுக்கள் பிரதியை 5 முறையும் பெற்றுள்ள மொயின் அலியின் சிறந்த பந்துவீச்சுப் பிரதி 112 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்கள் ஆகும்.
மேலும் ஒருநாள் போட்டிகள் 138 இல் பங்கேற்றுள்ள அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைச்சதங்களுடன் 2355 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் அதிகூடிய ஓட்டமாக 128 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது. பந்துவீச்சில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்ற சிறந்த பெறுபேற்றுடன் 111 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டியுள்ளார்.
அத்துடன் 92 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்று 7 அரைச்சதங்களுடன் 72 ஓட்டங்கள் என்ற அதிகூடிய ஓட்டத்துடன் 1229 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பிரதியுடன் மொத்தமாக 51 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மொயின் அலி இவ்வாறு குறிப்பிட்டார், ‘எனக்கு 37 வயதாகிறதுஇ இந்த மாதம் இடம்பெறவுள்ள அஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தான் தெரிவு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், இது அடுத்த தலைமுறைக்கான நேரம், இது சரியானது நேரம் என்று உணர்ந்துள்ளேன்.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமாகியது முதல் எனது பங்களிப்பை நான் வழங்கியுள்ளேன் என்று நினைக்கின்றேன்.நான் மிகவும் பெருமைப்படுகிறேன்இ நீங்கள் முதலில் இங்கிலாந்துக்காக விளையாடும்போது, நீங்கள் எத்தனை போட்டிகளில் விளையாடப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.’ என்றும் மொயின் அலி குறிப்பிட்டுள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)