நிந்தவூர் அல்-அஷ்ரக்கின் 78 ஆவது அகவை கொண்டாட்ட நிகழ்வுகள்
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 78 ஆவது அகவை தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் காசிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், கல்லூரி தாயின் வரலாறு சம்பந்தமாக கல்லூரியின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியரும் முன்னாள் க. பொ.த. உயர் தர பிரிவின் பகுதித் தலைவருமாகிய எம்.ஏ. அச்சி முஹம்மட் ஆசிரியரால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் மாணவர்களுக்கு பாடசாலை வரலாறு சம்பந்தமான உரையில் இருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் இந்நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பாடசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட பேனைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினரும் எல்.ஓ.எல்.சி. நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளருமாகிய ஏ.எல். முஹம்மத் பாயிஸ், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும் கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளருமான ஏ.எம். ஹைகல் மற்றும் பாடசாலையின் பகுதித் தலைவர்களும் ஆசிரிய ஆசிரியைகளும் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும், மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் 78 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு ஸ்டிக்கர் ஒன்றும் பிரதம மற்றும் விசேட அதிதிகளுக்கும் பாடசாலை பகுதித் தலைவர்களுக்கும் பாடசாலை அதிபரினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)