புத்தளம் பாத்திமா பாலிகாவில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி
ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது மாணவிகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவர்களால் நபி ஸல் அவர்களின் வாழ்க்கையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
கீழ் வரும் விடயங்களும் நினைவூட்டப்பட்டது
- நபி ஸல் அவர்கள் முழு மனித சமூதாயத்தின் விமோசனத்துக்காக அனுப்பப்பட்டவர்
- மிக சிறந்த குடும்ப அந்தஸ்துடையவர்
- எந்த குறையும் இல்லாமல் படைக்கப்பட்டவர்
- அவர்களின் வாழ்க்கையை பின்பற்றுவதின் முக்கியத்துவம்
அது மாத்திரம் இல்லாமல் அந்த பாடசாலையில் மிக சிறந்த சமூகத்துக்கு பிரயோசனம் உள்ள மாணவிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இஸ்லாமிய கலாசார கலகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இது ஒரு முன்மாதிரியான செயல்திட்டமாகும் இந்த கலகம் தொடர்ச்சியாக நடைப்பெறுவதற்கு அல்லாஹ்வுதாஆலா உதவி செய்வானாக.
அதிபர், உப அதிபர் ,ஆசிரிய, ஆசிரியைகள்(குறிப்பாக அஷ்ஷேக் அப்துல் ஹமீத் ஆசிரியர்)மாணவிகளுக்கும் அல்லாஹ் தஆலா ஈருலகிலும் வெற்றியை அடையச்செய்வானாக.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை