உள்நாடு

தனக்கு ஆதரவளிக்காத எம்.பி க்கள் பதவி விலகலாம்; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு, ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புக்கள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இக்கட்டான தருணத்தில், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனி நபர்கள், அரசாங்கத்தில் தொடர்வது அர்த்தமற்றது எனவும், தமது தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதன் விளைவாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள், தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தமக்கு சுதந்திரம் அளிக்குமாறும், கருத்து வேறுபாடுள்ள உறுப்பினர்களை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான மேன் முறையீடுகளை கருத்திற் கொண்டே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நான்கு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *