உள்நாடு

அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்று சொன்னால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இதனை விடவும் மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. 2020 இல் ஆரம்பம் முதலே சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் தொழில் முனைவோர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பி உள்ளோம். அதனால்தான் இந்த பிரச்சினையை முறையான கலந்துரையாடலின் பக்கம் இட்டு செல்ல முடிந்துள்ளதோடு, அரசாங்கத்தினதும் பொறுப்புக் கூறக் கூடியவர்களின் கொள்கை திட்டங்களை வகுக்கின்றவர்களின் அவதானத்தின் பாலும் இட்டு செல்ல முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தத் துறை குறித்து அக்கறை செலுத்துகின்ற வர்த்தகர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நான் கலந்து கலந்துரையாடி இருக்கின்றேன். நாடு வங்கரோத்தடைந்தமையினால் ஏதேனும் ஒரு வகையில் நிவாரணங்களை வழங்குகின்ற சர்வதேச நாணய நிர்ணயத்தை சந்திக்க முடியாமல் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த நாட்டுக்கான பிரதானியையும், உலக வங்கியையும், IMF இன் ஐரோப்பிய சங்கத்திற்கான தூதுவர்களிடம் நேரடியாக எமது பிரச்சினையை முன் வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த அரசாங்கம் செய்யாததை ஐக்கிய மக்கள் சக்தி செய்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வீழ்ந்திருந்திருக்கின்ற பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. எதிர்க்கட்சி என்ற வகையில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அனுசரணையாளராக செயற்பட முடிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு இதனை விடவும் அரசாங்கம் இன்னும் அக்கறை செலுத்தி இருந்தால், இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக அதிகமாக ஏதேனும் செய்திருக்கலாம். அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டி இருந்த போதும் அன்று அதனை காண முடியவில்லை. இன்றும் அதேபோன்று சந்தர்ப்பவாதத்தை வைத்தே செயற்படுகின்றது. உண்மையான வெளிப்படை தன்மையும் உணர்வும் அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்கத்திடம் கூறியபோது அவர்களுக்காக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது. வங்கி கட்டமைப்பே வீழ்ச்சி அடையும் என அரசாங்கம் கூறியது. வங்கிக் கட்டமைப்பின் சேமிப்பாளர்களாக இந்த வர்த்தகர்களே இருக்கின்றார்கள். இவர்களினால் வங்கிக் கட்டமைப்பு இலாபம் அடைந்தாலும், அதனை மறந்த அரசாங்கம் இவர்களை நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

🟩 நாம் இல்லை என்றால், அரசாங்கம் பராட்டே சட்டத்தை தற்காலிகமாகவும் இடைநிறுத்துவதில்லை.

தான் கேள்வி எழுப்பியமையினாலே பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிந்தது. நாம் இதுகுறித்து குரல் எழுப்பி நான்கு வருடமும் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. தற்பொழுது தேர்தல் நெருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்பது போதுமானதாக இல்லை. அதை தற்காலிகமாக நிறுத்துவதோடு மாத்திரமில்லாமல், அவர்களால் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவு செலவுக்கு ஏற்ற மூலதனத்தை வழங்கி, கடனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இவற்றை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் பொருளாதார இயந்திரத்தின் முக்கிய ஆணியாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை காணப்படுகின்றது. அவர்களுக்கான கடமையை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றும். அத்தோடு நட்பு வட்டார முதலாளித்துவத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *