நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துப் பயிற்சியாளரான ரங்கன ஹேரத் நியமனம்
நியூஸிலாந்து தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விளையாடவுள்ள அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ரங்கன ஹேரத் செயற்படுhர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று இம்மாதம் 9ஆம் திகதி இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியாகும். மற்றையது இலங்கை அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும்.
மேலும் இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரங்கன ஹேரத் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இறுதியாக ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து பயிற்றுவிப்பாளராக செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளைஇ முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், நொய்டாவில் நடக்கும் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்துள்ளார்.