அமைச்சர் அரவிந்தகுமார் வெளியேற்றம்
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதுவரை தான் வசித்து வந்த ஹட்டன் லிந்துல ஹென்பொல்ட் தோட்ட விடுதியில் இருந்து நீதிமன்ற பிஸ்கல் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டில் இவர் இத்தோட்டத்தில் பணியாற்றும் போது இவருக்கு வழங்கப்பட்டிருந்த இந்த விடுதியை இத்தொழிலில் இருந்து அவர் வெளியேறும் போது தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்காது அதை பயன்படுத்தி வந்தார்.
இதனால் இத்தோட்ட நிர்வாகம் இவருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்ததன் மூலம் விடுதியில் இருந்து வெளியேறுமாறு அரவிந்தகுமார் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
எனினும் இத்தீர்ப்புக்கு எதிராக இவர் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் மேன்முறையீடு செய்தபோதிலும் இவை இரண்டும் நுவரெலிய மாவட்ட நீதிமன்ற நீதவானின் தீர்ப்பினை செய்துள்ளது.
இதற்கிணங்க இத்தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தின் பிஸ்கல் உத்தரவுக்கு இணங்க லிந்துல பொலீஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் இந்த விடுதியில் இருந்த அனைத்து பொருட்களையும் பட்டியலிட்டு ஒரு பிரதியை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளதுடன் விடுதியை இத்தோட்டத்தில் கடமையாற்றும் வேறொரு அதிகாரிக்கு வழங்க உள்ளதாக தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
(பாயிஸ்)