உள்நாடு

ஜே.வி.பீ யின் பயங்கரமான சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கலாம்..! -மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.டி.முத்தலிப்

தேசிய மக்கள் சக்தியினால் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என ஒரு சிறு கூட்டத்தினர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையிலேயே 1971, 1986, 1987, 1989 களில் நடைபெற்ற பயங்கரமான சம்வங்களை நாம் இப்போது மறந்தாலும் அந்த கொள்கை கோட்பாடுகள் மீளவும் தலை தூக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்ப்பினர் எம். டி முத்தலீப் தெரிவித்தார்.
ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அக்குறணை கசாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்ப்பினர் எம். டி முத்தலீப் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுடன் அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 39 பேர் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் முக்கியமான நான்கு வேட்பாளர்களுக்கிடையே இங்கு போட்டிகள் நிலவுகின்றன. இந்தப் போட்டியில் நான்கு பேரும் சரிக்கு சமனாக இருக்கின்றார்கள் என்பதுதான் என்னுடைய கருத்துக் கணிப்பாகும். அது ஆண்டவனுக்குத்தான் நன்கு தெரியும். தீர்ப்பு வழங்கக் கூடிய சக்தி எங்களிடம் இல்லை. யார் வருவார் எவர் வருவார் என்பது எங்களுக்குத் தெரியாது. அனைத்தையும் அறிந்தவன் ஆண்டவன். ஆனாலும் நாங்கள் கண்டவற்றை வைத்து உள்ளதைச் சொல்லுகின்றோம். நீங்கள் தீர்ப்பு வழங்குங்கள்.
இந்த நான்கு வேட்பாளர்களும் எவ்வாறு எப்படி எல்லாம் ஆட்சி செய்வார் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த தேர்தல் ஒரு இலகுவான தேர்தல் அல்ல. யாரும் எதிர்பார்க்காத தீர்ப்புகள் வரலாம். நாங்கள் நினைக்கக் கூடாது கட்சி தாவல்கள் நடப்பதை வைத்து நாங்கள் முடிவுகள் எடுக்கக் கூடாது. ஒரு கட்சியின் சார்ந்த பிரல்யம் ஒருவர் இணைந்தால் மக்கள் இணைவது அல்ல. பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிக்கச் சென்றுள்ளார்கள். அப்படி கட்சி தாவியவர்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பார்த்தால் 90 இலட்சம் வாக்கு அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். கண்டி மாவட்டத்தில் உடுநுவரத் தேர்தல் தொகுதியை எடுத்துக் கொண்டால். ஒரு 10 பேரைக் கூட்டி கூட்டம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இக்கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.
இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ள நான்கு வேட்பாளர்களுக்கிடையே ஒவ்வொரு சரித்திரம் இருக்கின்றது. நாமல் ராஜபக்~ அவர்களை பொறுத்தவரையில் இந்த நாட்டின் இரு முறை ஜனாதிபதியாக இருந்தவருடைய புதல்வர். நாங்கள் அவரைக் குறை கூறலாம். அவரை தெய்வமாக வணங்கும் கூட்டம் ஒன்று இருந்து கொண்டு இருக்கிறது. ஊழல் என்பது மஹிந்த ராஜபக்~ எப்பொழுது ஆட்சிக்கு வந்தாரோ அன்று 2004 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி விட்டது. இந்த மஹிந்த ராஜபக்~ அவர்களுக்கு சிறுபான்மையின மக்கள் எப்பொழுதும் வாக்களிக்க வில்லை. பெரும்பான்மையின மக்கள்தான் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். அவர்தான் இந்த நாட்டை அதலாள பதாலத்திறகுக் கொண்டு வந்தார். அதனால் தான் பொதுஜனப் பெரமுனக் கட்சியின்; உள்ள பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர் விலகி ரனில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். மஹிந்த ராஜபக்~வுடன் சேர்ந்து சென்றால் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவேதான் நாமல் ராஜபக்~ அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் வாக்களிக்கமாட்டாhர்கள் என்பதை வெளிப்படையாகவே நாம் கண்டு கொள்ளலாம்.
திசை காட்டி சின்னத்தின் தலைவர் அனுர குமார திசாநாயகவின் சில இளம் ஆதரவாளர்கள் 1971, 1987, 1988, 1989 ஆகிய தினங்களில் இடம் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகளைச் சொல்லி சொல்லி பயம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நவீன உலகத்தில் அந்த விடயங்களை பற்றி தெரியாது. அதைப் இப்போது பேச வேண்டாம் என்று சிலர் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் எந்த தோலைப் போர்த்திக் கொண்டு வந்தாலும் புலி புலிதான். மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையை அவர்கள் விடவில்லை. இந்த காலத்தில் எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அப்படி ஈடுபடாமல் இருப்பதற்கு ஆண்டவன் காக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஆனாலும் அவர்கள் சில மறைமுகமான தகவல்களை வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் வந்தால் இதைத்தான் செய்வோம். அதாவது நாட்டிலுள்ள சொத்துக்களை விற்பனை செய்து அரசாங்கம் செய்வோம், கடன் எடுப்போம். கண்டி தபால் நிலையம், ஹில்டன் ஹோட்டல், போகம்பர, நுவரெலியா தபால் நிலையம் கொழும்பிலுள்ள அரச நிறுவனங்களை விற்பனை செய்வோம். மீளவும் பணத்தை அச்சடித்தல், வங்கியிலுள்ள பணத்தை எடுத்து நாட்டைச் செய்வோம், ஓரினச் சேர்க்கை அங்கீகாரம் வழங்குவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் ஹந்துன்னெத்தி அவர்கள் ஒரு நிருபக்கு அளித்த பேட்டியின் போது இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார். எனவே இப்படி பல விடயங்களைக் தொட்;டுக் காட்ட முடியும். எனவே நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொள்வதற்கு இதை விட வேறு விளக்கம் தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்.

 

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *