உலகம்

ஓமியம் நிறுவனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.‌இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதுபோன்று, தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்ழர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இதுபற்றிய புகைப்படங்களையும் அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார்.

இதன்பின், அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இதற்காக, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஓமியம் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.

பின்னர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் தமிழக முதல்வர் மு‌.க. ஸ்டாலின் பேசியதாவது : “அமெரிக்கா – இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு”
அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா உறவு இரு நாட்டு உறவல்ல, இது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது.‌தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அமெரிக்க நிறுவனங்களை புலம்பெயர் தொழிலாளர்கள் வலியுறுத்த வேண்டும். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்காவில் இருந்து நிறைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன இவ்வாறு அவர் பேசினார்.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *