உள்நாடு

அல்ஹம்றா “ஒளிக்கீற்று” ஆவணப்பட வெளியீடும், திரையிடலும்…!

இலங்கையில் பழைமை மிக்கதும் பெருமைக்குரியதுமான முதல் முஸ்லிம் பாடசாலையாக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் இரண்டாவதாக தர்ஹா நகர் அல்ஹம்றா மஹா வித்தியாலமும் கொடிகட்டிப் பறந்தன.

இலங்கையின் பல பிரதேசங்களிலுமிருந்தும் அல்ஹம்றா மஹா வித்தியாலயத்தை நாடி வந்து படித்து உலகின் பல பாகங்களில் ஆளுமை மிக்கவர்களாகப் பலர் திகழ்கின்றனர்.பல்துறை வரலாற்றுப்பெருமைகள் கொண்ட தர்ஹா நகர் அல்ஹம்றா ம. வி. இன் 125வது ஆண்டு நிறைவையொட்டிய முன்னெடுப்புக்களில் ஒன்றாக, அல்ஹம்றா – ஒளிக்கீற்று எனும் வரலாற்று ஆவணப்படம் செப்டம்பர் முதலாந்திகதி காலை 10.30இற்கு பம்பலபிடி மெஜஸ்டிக் சிடி Gold cinema தியேட்டரில் திரையிடப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவியும், பல்கலைக்கழக விரிவுரையாளருமான செல்வி சஃபானா ஹக்கீம் இவ்வரலாற்று ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இப்பிரதேச முதல் பெண் ஆவணப்பட இயக்குனரான இவரது முயற்சி பாராட்டப்படத்தக்கது.

இவ் ஆவணப்படம் Aathmaa Jafir இன் மேற்பார்வையில் Sirahununi Centre for Arts Media நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *