உள்நாடு

கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 16 தேர்தல் வன்செயல்கள்

2024 ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடையதாக கடந்த 27 ஆந் திகதி தொடக்கம் இற்றவைரையான காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 16 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை மத்தியில் கட்சி ஆதரவாளர்களை தாக்கி காயப்படுத்தியமை, தேர்தல் அலுவலகங்களுக்கு தீவைத்தமை உள்ளிட்ட தேர்தல் அலுவலகங்களை சேதப்படுத்தியமை என்பவை உள்ளடங்குகின்றன.

மேற்படி 16 சம்பவங்கள் பின்வருமாறு:

1. 2024.08.27 ஆந் திகதி மினுவங்கொட பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் உடைத்து சேதப்படுத்தப்பட்டமை

2. 2024.08.27 ஆந் திகதி குருநாகல் பமுணுகெதர பிரதேசத்தில் நடாத்திவரப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது தாக்கதல் நடாத்தப்பட்டமை

3. 2024.08.27 ஆந் திகதி குருநாகல் தஹய்கமுவ பிரதேசத்தில் இயங்கிவந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம்மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை

4. 2024.08.27 ஆந் திகதி மொணறாகல வெலியாய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை பேணிவந்த தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் அங்கத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளரொருவர் தாக்கி காயமேற்படுத்தியமை

5. 2024.08.27 ஆந் திகதி சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் லியன்கொல்ல பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் அங்கத்தவரொருவர் தாக்கப்பட்டமை

6. 2024.08.28 ஆந் திகதி மீரிகம பிரதேசத்தில் நடாத்திவந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு தீமூட்டி சேதமேற்படுத்தியமை.

7. 2024.08.29 ஆந் திகதி மினுவங்கொடவில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் தாக்கப்பட்டமை.

8. 2024.08.30 ஆந் திகதி எஹெலியகொட பரகடுவ சந்திக்கு அருகாமையில் நிறுவப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை தீக்கிரையாக்கி அழித்தமை.

9. 2024.08.30 ஆந் திகதி எஹெலியகொட வசம்பிட்டிய சந்திக்கருகில் அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை தீக்கிரையாக்கி அழித்தமை,

10. 2024.08.30 ஆந் திகதி மேற்படி எஹெலியகொட பரகடுவ சந்திக்கு அருகாமையில் இருந்த அலுவலகத்திற்கு தீமூட்டியமை சம்பந்தமாக முறைப்பாடு செய்தமையால் மேற்படி அலுவலகத்தை பேணிவந்தவரை தாக்கியமை

11. 2024.08.30 ஆந் திகதி பொல்கஹவெல பிற்றவல சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை உடைத்து நாசமாக்கி கறுப்பெண்ணெய் ஊற்றியமை.

12. 2024.08.30 ஆந் திகதி வாரியபொல ரம்புக்கன கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை உடைத்து அதற்கருகில் அமைந்துள்ள காணி உரிமையாளரின் வீட்டுக்கும் கடைக்கும் சேதமேற்படுத்தியமை

13. 2024.08.31 ஆந் திகதி ஹாரிஸ்பத்துவ பொக்காவல நகரத்தில் அமைந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் உடைக்கப்பட்டமை

14. 2024.09.01 ஆந் திகதி புத்தளம் நகரத்தில் முன்னாள் நகரபிதா ரஃபீக்கை உள்ளிட்ட கும்பலால் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரொருவர் தாக்கப்பட்டமை

15. 2024.08.31 ஆந் திகதி ஹாரிஸ்பத்துவ பொக்காவல நகரத்தில் உடைத்துப்போடப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீண்டும் 2024.09.01 ஆந் திகதி சேதப்படுத்தப்பட்டமை

16. 2024.09.03 ஆந் திகதி அதிகாலையில் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவின் பொல்லெபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு தீமூட்டி சேதமேற்படுத்தியமை.

சட்டத்தரணி அகலங்க உக்வத்த
ஊடகப் பேச்சாளர் – தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *