உள்நாடு

அரச ஊழியர்கள் அன்று சம்பள அதிகரிப்பை கோரிய போது வற்வரி என்று மக்களை வெறுப்பூட்டிய ஜனாதிபதி, இன்று அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றார்..!    -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதோடு, அடிப்படைச் சம்பளத்தை 57500 ரூபா வரையும், 17,500 ஆக காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரையும் அதிகரிப்போம். 6-36% ஆக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1- 24%  வரை குறைப்போம். 2014 இல் இருந்து அரச சேவையில் இணைந்து கொண்டவர்களுக்கு கிடைக்காத ஓய்வூதியத்தை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களை குறிப்பிடும்போது இதுவரையும் உறங்கிக் கொண்டிருந்த பதில் ஜனாதிபதி திடீரென விழித்தெழுந்து, அரச ஊழியர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றார். அரச ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சம்பள அதிகரிப்பை கோரியபோது, அந்த சந்தர்ப்பத்தில் வற்வரியை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என மக்களை அச்சமூட்டி, அரச ஊழியர்கள் தொடர்பில் பிழையான பிம்பம் ஒன்றை உருவாக்கினார். வற்வரியை அதிகரிப்பதன் ஊடாகவே அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கும் தெரிவித்தார். ஆனால் இன்று அவ்வாறு எதுவுமில்லை. எனவே அரசாங்கத்தின் பொய்களுக்கும் தந்திரங்களுக்கும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யும் 33 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் (03) மாலை புத்தளத்தில் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயத்திற்காக பெருமதியான வேலைத்திட்டங்களை தயாரித்து இருக்கின்றோம். நெல்லுக்கான நிர்ணய விலை, 50 கிலோ கிராம் உரமூடை ஐயாயிரம் ரூபாவிற்கு வழங்கும் நிவாரண முறை, QR Code ஊடாக எரிபொருள் நிவாரணம் என்பனவற்றை வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நான் விவசாய கடனை இரத்து செய்வேன் என்று கூறும்போது, ஜனாதிபதியும் அதனையே கூறுகின்றார். இப்பொழுது ஜனாதிபதி அவ்வாறான கதைகளை கூறினாலும், இரண்டரை வருடம் என்ன செய்தார் என கேட்கின்றோம். நாம் விவசாய கடனை இரத்து செய்வோம் என கூறிய பின்னரே ஜனாதிபதி அதனை கூறுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை வங்கரோத்தடையைச் செய்தவர்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டையே இரண்டரை வருட காலமாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் செய்தது. இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தட்டிலே வைத்து பிரதமர் பொறுப்பையும் ஜனாதிபதி பதவியையும் தந்த போதும், திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினாலும், திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலும் அந்த பொறுப்புக்களை நாம் மறுத்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாற்று சக்தி என்று கூறிக்கொள்கின்றவர்களும் ஜனாதிபதியின் ஆட்களும் என்னை விமர்சிக்கின்றார்கள். பாடசாலைகளை அபிவிருத்தி அடைய செய்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தபோதும் என்னை விமர்சித்தார்கள். தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி அடையச் செய்வேன். வேலை செய்ய முடியாதவர்கள் முடியாது என்று கூறுகின்ற போதும் என்னால் முடியும். 76 வருட காலம் குறித்து பேசும் வாய்ச் சொல்லாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலை செய்யாத போதும், தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டுக்காக சேவை செய்யும் முறையை மாற்றியமைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *