உள்நாடு

மக்கள் பழக்கப்பட்ட பழைய இடங்களைவிட்டு தேசிய மக்கள் சக்தியை நோக்கி குவிந்து வருகிறார்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில் கூறுகிறார் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கேஸ் இல்லாமல் போய்விடுமாம்; எல்லாமே முடிந்துவிடுமாம். அவர்கள் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். தோல்வியடைகின்ற தலைவர்கள் சதாகாலமும் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் வெற்றிபெறாவிட்டால் தேசம் ஆபத்திலாம்; பொருளாதாரம் ஆபத்திலாம். ஆனால் வெற்றிபெற்ற அவர்கள்தான் இந்த நாட்டையும் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிட்டவர்கள். இப்போது சஜித் அணியைச் சோ்ந்தவர்களும் நாங்கள் வந்தால் நாடு ஆபத்தில் எனக்கூறுகிறார்கள். அந்த எல்லோரையும் விட இந்த நாடு பற்றியும் நாட்டில் உள்ள மக்கள் பற்றியும் தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த எமக்கு பொறுப்பு இருக்கின்றதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதன் பாதகவிளைவுகளைத்தான் நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் அப்படித்தான்.

இற்றைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசாங்க ஊழியர்கள் உயிர்வாழ இயலுமான அளவிலான சம்பளத்தை கொடுக்குமாறு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அப்போது ஒரு சதம் கூட அதிகரித்துக் கொடுக்க முடியாது அவ்வாறு அதிகரித்தால் நாடு சீரழிந்து விடுமென ரணில் கூறினார். நிதியமைச்சின் செயலாளர் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தால் வற் வரியை 21% வரை அதிகரிக்க வேண்டிவரும் எனக்கூறினார். கடந்த ஜுலை மாதத்திலே இவ்வாறு கூறினார். இப்போது கூறுகிறார் ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 25,000 கொடுப்பனவினை வழங்குவதாக; 24% சம்பள அதிகரிப்பினை வழங்குவதாகவும் கூறுகிறார். அவரால் அப்படிக் கூறமுடியும். ஏன்? அவர் என்றால் இந்த தடவை தோல்வியடைவார் அல்லவா! இன்று அமைச்சரவையில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை கடன்கள் அனைத்தையும் வெட்டிவிடுவதாக தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு இடம்பெற்றால் ஒவ்வொரு நாளும் தோ்தல் நடைபெற்றால் நல்லதென மக்கள் நினைப்பார்கள். இவை தோல்வியின் மத்தியில் கொடுக்கின்ற போலித்தனமான வாக்குறுதிகள். நீங்கள் இப்பொழுது தாமதித்துவிட்டீர்கள் என நாங்கள் ரணிலுக்கு கூறுகிறோம். நீங்கள் இந்நாடு பற்றி இந்த நாட்டு மக்களை பற்றி சிந்தித்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவற்றை இற்றைக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே செய்திருக்கவேண்டும். இப்போது அதிகாரம் கைநழுவிப் போய்விடும் என நினைத்து துடிக்கிறார்கள்; மக்கள் தம்மோடு இல்லையென நினைக்கிறார்கள். அதோ பழைய பழக்கங்கள் தோ்தல் ஏமாற்று வேலைகளை செய்ய தொடங்கி விட்டார்கள். ரணில் இன்னமும் பழைய அரசியலில் தான் இருக்கிறார். இந்நாட்டு மக்கள் இனிமேலும் தோ்தல் ஏமாற்று வேலைகளில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறிய சிறிய கொடுப்பனவுகளால் இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அவர்கள் இப்பொழுது பழக்கங்களை கைவிட்டு தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ரணிலால் மீளத்திருப்ப முடியாது.

ரணிலுடைய மற்றும் சஜித்துடைய இரண்டாம் மட்டத்தைச் சோ்ந்தவர்களிடம் இப்போது ஒரு கதை அடிபடுகிறது நாங்கள் பிரிந்து சென்றால் அதோ கதிதான். அதனால் ஒன்றுசோ்வதற்கு ஒரு வழிகிடையாதா? என்று. தேசிய மக்கள் சக்தி இவ்வாறு பயணித்தால் வென்றுவிடும். நாங்கள் இருசாராரும் பிரச்சினையில் வீழ்ந்துவிடுவோம். அதனால் ஒன்று சேர ஒரு வழிகிடையாதா? இன்னமும் இரண்டாம் அடுக்கினைச் சோ்ந்தவர்கள் தான் அந்தக் கதையை தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள் கூறவேண்டிய பதில் நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்று தான். தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் பலத்தையும் அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற இயக்கத்தையும் மீளவும் திருப்பமுடியாது. அதனை வெற்றியிலேயே முடிப்போம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இன்று எமது தோ்தல் இயக்கத்தை மக்கள் தமது கைகளில் எடுத்துவிட்டார்கள். நாங்கள் அறிந்திராத பாரிய மக்கள் சக்தி எமக்காக இப்பொழுது சுயமாக முன்வந்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது சுயமாகவே எழுதத்தொடங்கி விட்டார்கள். இப்போது ரணில் நீங்கள் இதனை எப்படி நிறுத்துவது? இதனை நிறுத்த முடியாது. உறுதியாக நாங்கள் வெற்றிபெறுவோம். ஆனால் எங்களுக்கு தேவை சாதாரண வெற்றியல்ல. இந்த நாடு மிகவும் ஆழமான படுகுழிக்குள் இழுத்துப் போடப்பட்டுள்ளது. அதனால் நாட்டை மீட்டெடுக்க நிலையான, பலம்பொருந்திய ஒரு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. நாடு இவ்விதமாக பாய்ந்து செல்லவேண்டுமானால் அது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

நாங்கள் தொடர்ந்தும் பாய்ந்தோடுகின்ற இந்த நாட்டிலே அழிவுத்திசையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தால் நாடு படுகுழிக்குள் நிச்சயமாக வீழ்ந்து விடும். இந்த அழிவுப்பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கோரி நிற்கிறது. அவ்வாறு செய்ய பலம்பொருந்திய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதற்காக மக்களின் பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். இந்த நாட்டை சரியான திசைக்கு திருப்புகின்ற தீர்மானங்களை எடுக்க பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். முதலில் இந்த அரசியல் போராட்டக்களத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த அரசியலை பொதுமக்கள் அறவோடு வெறுக்கிறார்கள்; அருவருக்கிறார்கள். இப்போது சமூக வலைத்தளங்கள் முன்னேற்றமடைந்து தகவல்கள் எளிதாக பாய்ந்து வருகின்றன. அதனால் இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். ரிச்சட் பத்திரண மகனுக்கு பாதையை அமைக்கிறார். தொடங்கொட மகனுக்கு பாதையை அமைக்கிறார். அப்படித்தான் இவ்வளவு காலமும் அரசியல் பயணம் நிலவியது. இதுவரைகாலமும் அவர்களின் குடும்பங்களுக்கே அவர்களின் அன்பர்களுக்கே பாதையை அமைத்தார்கள். அதனால் மக்கள் இந்த அரசியலை அருவருத்தார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அதிகாரத்தை எடுத்து இந்த அரசியல் களத்தை கட்டம் கட்டமாக சுத்தம் செய்வோம்.

ஊர்களில் பொலிஸில் உத்தியோகத்தர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக அதிகரித்த குழுவினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இவையனைத்தையும் நிறுத்துவோம். இலங்கையில் இதுவரை அரசாங்கம் எனக்கூறி ஒன்றில் ஒரு குடும்பத்தை உருவாக்கினார்கள். அல்லது ஒரு கும்பலை உருவாக்கினார்கள். நாங்கள் இலங்கையில் முதல் தடவையாக அரசாங்கம் என்றால் என்ன? என்பதை உண்மையாக உணர்த்தும் அரசாங்கமொன்றை அமைப்போம். அப்போது மக்களிடம் நம்பிக்கை உருவாகும். மக்கள் தமது பொறுப்புக்கூறலை ஈடேற்ற முனைவார்கள். கைத்தொழில் முனைவோர் தொழில் முனைவோர் தமது பங்கினை ஆற்றத் தொடங்குவார்கள். இந்த எல்பிடியவின் தேயிலை சிறு பற்றுநில உரிமையாளர்கள் தமது வேலைகளை செய்ய தொடங்குவார்கள். அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும். எல்லாத்துறைக்கும் எமது அரசாங்கத்தின் கவனிப்பு கிடைக்கும். அப்போது உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். நாடு வளமடையும்.

நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு ஒத்துவரக்கூடிய கல்வித் திட்டமொன்று, பாடசாலை முறைமையொன்று, பல்கலைக்கழக முறைமையொன்று எம்மால் கட்டியெழுப்பப்படும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையாக அமைந்துள்ள இந்த கல்வித்திட்டத்திற்கு பதிலாக அவர்களுக்கு சுமையாக அமைந்திடாத நவீன முன்னேற்றகரமான கல்வி முறையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே அதிகாரத்தை கோரி நிற்கிறது. இந்த நாட்டை அழகானதாக்க இந்த நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக இந்த மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முன்னணிக்கு வருமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

(தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – எல்பிட்டிய – 2024.09.03)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *