கிளீன் புத்தளம் அமைப்பின் ஆவணம் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது
புத்தளம் வண்ணாத்திவில்லு, அருவைக்காலுவில் தின்ம கழிவு அகற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவிடம் கிளீன் புத்தளத்தின் ஆவணம் கையளிக்கப்பட்டது.
கிளீன் புத்தளம் பிரச்சாரத்தை, வேட்பாளர்களிடையே பேசும் பொருளாக மாற்றுவதற்கான தொடர் முயற்சிகளில் ஒன்றாக இது நடந்து முடிந்தது.
இந்த ஏற்பாட்டை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஏ.எஎச்.எம்.ரியாஸ் செய்து கொடுத்து இருந்தார்.
தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பிற்காக ஆனமடு நகருக்கு வரும் நாமல் ராஜபக்சவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு என்ற கோரிக்கையையும் முன்னாள் அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவியிடம் வேண்டுகோள் ஒன்று கிளீன் புத்தளம் அமைப்பினரின் மூலமாக கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம்.சனூன்)