1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில், பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பி. யினரே – விக்னேஸ்வரன் சாடல்
“1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில், பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பி. யினர்” என்றும், “எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது” என்றும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்திப் பேசினார்.
அவரது இல்லத்தில் நேற்று (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாட்டைத் திருடியவர்கள், சூறையாடியவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம்” என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )