கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்
ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை மு.ப.7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவதரித்த புனித ரபியுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் இம் மஜ்லிஸ் வருடாந்தம் நடைபெருகிறது.
உம்மு ஸாவியா பிரதம இமாம் அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி முதல்வர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.எஸ். அஹ்மத் சூபி (மஹ்ழரி) தலைமையில் 5ஆம் திகதி ஆரம்பமாகும் இம் மஜ்லிஸ் 16ஆம் திகதி முற்பகல் தமாம் செய்யப்படும்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 12 தினங்களும் ஹதீஸ் பராயண நிகழ்சிகளை தினமும் மு.ப.7:30 மணி முதல் 8:00 மணி வரை நேரடியாக அஞ்சல் செய்யும்.
வெள்ளிக்கிழமை தினம் மாத்திரம் 8:00 மணி முதல் 8.30 மணி வரை அஞ்சல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அஹமத் சூபி (மஹ்ழரி) ஹதீஸ் விளக்கவுரை நிகழ்துவார்.
உம்மு ஸாவியா நிர்வாக சபை தலைவர் தேசபந்து அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம் தலைமயிலான நிர்வாக சபையின் வழிகாட்டலின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படு வருகிறது.
நிர்வாக சபையின் சமய விவகார குழு தலைவர் முன்னாள் பலஸ்தீன் தூதுவர் அல்-ஹாஜ் பெளஸான் அன்வர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள்,கலீபாக்கள்,முகத்தமீன்கள்,முன்சிதீன்கள்,இஹ்வான்கள் நிகழ்வில் பங்குபற்றுவர்.
(பேருவளை பி எம் முக்தார்)