ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடியில் பல்தேவைக்கட்டடம் திறக்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடம் எதிர்வரும் 01.10.2024ம் திகதி அஸர்த்தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
2021ம் ஆண்டு கொரோனா (Covid 19) காலப்பகுதியில் (11.01.2022) காலமான பேருவளை, சீனங்கோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூமா ஹாஜியானி சவாஹிர் இரீபதுல் ஹைரியாவின் (3,330) ஞாபகார்த்தமாக இப் பல்தேவைக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 17 ஏக்கர் விசாலமான காணியில் இம்மையவாடி அமையப்பெற்றுள்ளதுடன், கொரோனா காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் மரணித்தவர்களில் 3,634 உடலங்கள் இம்மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 2,956 உடலங்கள் முஸ்லிம்களுடையதாகும். அதில் ஜனாபா மர்ஹுமா ஹாஜியானி இரீபதுல் ஹைரியா சவாஹிரும் ஒருவராவார்.
அன்னாரின் ஞாபகர்த்தமாக கணவர் மற்றும் பிள்ளைகளினால் “பைத்துல் ஹைராத்” என்ற நாமத்துடன், அழகிய தோற்றத்தோடு, அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடமாக (140’X40′) மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மக்கள் பாவனைக்குமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
(பேருவளை பி எம் முக்தார்)