தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுவோர் கைதாகலாம்; தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை
வாக்காளர்களின் சுயாதீன பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர் கைது செய்யப்படக் கூடிய சாத்தியமுள்ளதாகவும் எனவே அவ்வாறானோர் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் சமன் ரத்னாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எந்த வித ஆதாரங்களும் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது தண்டனைக்குரிய குற்றமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.