தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை : மீறினால் கடும் சட்ட நடவடிக்கை
“தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக, ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது, இசைக் கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, “தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு நிறுவனத்திலும் வாக்குக் கேட்கவோ, துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பரப் பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டக் கூடாது” என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )