உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் இரு முஸ்லிம் எம்.பீ க்களை பெறலாம். அசோக் அபேசிங்க எம்.பீ.கருத்து.

சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றிக்குப் பின் வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இரு பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம். குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர் உள்ளனர். எனவே இரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை உறுதியாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று குருநாகல் மாவட்டட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஆசோக அபேசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வது தொடர்பில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் குருநாகல் சீசன்ஸ் ஹோட்டலில் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் எம். டி. எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஆசோக அபேசிங்க இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த தேர்தலில் துரதிருடவசமாக குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவர் மட்டும்தான் போட்டியிட்டார். ரிஸ்வித் ஜவஹர்ஷா போட்டியிட முடியாற் போய் விட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடை பெறும் பொதுத் தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும். நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றேன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் முஸம்மில் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும்படி நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் பழையமுறைப்படி விகிதாசாரத் தேர்தல் முறைப்படியே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக இரண்டொரு நாட்களில் புதிய அமைச்சரவைக் குழு நியமிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்;. அதன் பிறகு பாராளுமன்றம் கலைக்கப்படும். பொதுத் தேர்தல் நடத்தப்படும். அத்துடன் நாங்கள் தலைவரிடம் நீதி மன்றத்திற்கு ஒரு கோரிக்கை விடுக்கப்படி கேட்டுள்ளோம். முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு முன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது.

அந்த தேர்தல் முறையினை மாற்ற செய்ய வேண்டும். தற்போது அதன் வேட்பாளர் 700 வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். 25 பேர் மரணம் எய்தியுள்ளார்கள். வட்டாரத் தேர்தல் முறைப்படி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்த முடியாது. அது பழைய விகிதாசார முறைப்படிதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது பற்றிய விடயங்களை நீதி மன்றத்திடம் கோரிக்கை விடுத்து கால எல்லை நீடிக்க வேண்டும் என்று தலைவரிடம் கேட்டுள்ளோம். அந்த வகையில் இங்குள்ள முன்னாள் பிரதேச உறுப்பினர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். வட்டாரத் தேர்தல் முறையின் மூலம் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. ஒரு வட்டாரத்திற்கு பேட்பாளர் ஒவருவரை நியமிக்கும் போது வேறு கட்சி சார்பான ஒருவரை நியமிக்க முடியாத நிலை தோன்றுகின்றது. எனது மிக நண்பர் அஸார்தீன் அவர்களைக் கூட வட்டாரத் தேர்தல் முறையினால் இணைத்துக் கொள்ள முடியாமற் போயிற்று. தெலியாகொன்ன பிரதேசத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்வி ஒரு பக்கத்தில் கேட்டார். மறுபக்கத்தில் எனது அயல் வீட்டு நண்பர் அஸார்தீன் அவர்களும் கேட்டார்.

தேர்தல் ஆணைக்குழு அலுலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு கட்சியின் உதவிச் செயலாளர் என்ற வகையில் அங்கு சென்று இருந்தேன். சகல கட்சிகளும் வட்டாரத் தேர்தல் முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று ஏகமானதொரு கருத்தை முன் வைத்தார்கள். பொதுஜனப் பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி என சகல கட்சிகளும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையினை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். வெகு விரைவில் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும், இறுதியாகத்தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்.

குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் முஸ்லிம் வாக்குகள் உள்ளனர். இதில் வெளிநாட்டுக்கும் பெரு எண்ணிக்கையானவர்கள் சென்றுள்ளார்கள். குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டுகம்பொல தேர்தல் தொகுதிய மறைந்த அலவி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். அதில் 80 விகிதமானத்திற்கு மேலான வாக்குகள் வாக்குகள கிடைக்கும். கடந்த பொதுத்து தேர்தலில் வைத்தியர் சாபி அவர்கள் எமது கட்சியில் போட்டியிட்டு 54 மேலான ஆயிரம் வாக்குகள் பெற்றார். அவர் வைத்தியர் என்ற காரணத்தினால் சிங்கள வாக்குகளும் அவருக்கு கிடைத்திருக்கும். ந~Pர் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு 38 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

அசோக அபேசிங்க இதுவரையிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வியடையாத பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். மூன்று பொதுத் தேர்தலில்களிலும் தோல்வியடையாமல் வெற்றியடைந்துள்ளேன் 2010 -2015, 2020 அந்த வகையில் கட்சியின் தலைவர் எனக்கு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கினார்.

நான் தான் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியில் முதல் பிரேரணையைக் கொண்டு வந்தேன். அதன் காரணமாக கட்சியின் அங்கத்துவம் இல்லாமற் செய்யப்பட்டது. தொகுதி அமைப்பாளர் பதவி இல்லாமற் செய்யப்பட்டது. அதேவேளையில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்க வேண்டும் என்று முதலில் குருநாகலில் பெரும் கூட்டத்தை கூட்டி ஆதரவு தெரிவித்தேன்

இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்காக குருநாகலில் முதல் கூட்டம் எனது ஏற்பாட்டில் நடைபெற்றது. மக்கள் பெரு வெள்ளம். கூட்டம் முடிவடைந்ததுடன் முன்னாள் மாநகர சபை முதல்வர் துசார என்னுடன் தொலைபேசியில் சஜித் வெற்றியடைந்து விட்டார். இப்படியான சனக் கூட்டத்தை நான் குருநாகலில் காணவில்லை என்று கூறி தனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் ஆளுநர் என்னைச் சந்திக்கும் போது முதல் இடத்தில் சஜித் பிரேமதாச அவர்கள் உள்ளார். இரண்டாம் இடம் அனுர குமார திசாநாயகவுள்ளார். மூன்றாவது இடத்தில் ரனில் விக்கரமசிங்கவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்தார். அதன் பிறகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயலாளர் என்னும் உரையாடும் போது சஜித் பிரேமதாச அவர்கள் 10 இலட்சம் வாக்கு அடிப்படையில் முன்னுக்கு இருக்கின்றார். இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வேலை செய்து கூட்டிங் கொள்ளுங்கள் என்றார். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவர். ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாச முதலிடத்தில் உள்ளார் என்ற செய்தியைச் சொல்லி தாங்கள் எத்தனையாம் இடத்தில் உள்ளோம் என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள்.

நான்கு இலட்சத்துக்கு மேல் வாக்குகளையே அடிப்படை வாக்குகளைக் கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி அதிகளவு செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வெற்றி பெறப் போவது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள். சஜித் வெற்றிக்கு யாரும் சாவல்கள் இல்லை. அதற்காக நாங்கள் அயராது உழைக்க வேண்டும். ஒவ்வொரு வீடாகச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மக்கள் விடுதலை முன்னிணியிடம் ஒப்படைக்கத் தயாராக இல்லை. அவர்களால் ஆறு மாதங்கள் கூட செய்ய முடியாது. வெற்றிபெறவும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விழா ஏற்பாட்டாளர் அஇமகா குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் முன்னாள் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஸார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் இர்பான், முன்னாள் பொல்கவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், ரிதிகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அஸாட் நஸீர், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *