விவாதத்திற்கு வருமாறு அநுரவுக்கு சவால் விட்ட சஜித் ; மொட்டின் முன்னாள் 191 உள்ளூராட்சி மன்றப் பிரதிகளும் சஜித்துடன் இணைவு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, மாத்தறை மாவட்டத்தின் ‘மொட்டு’ கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் அவருடன் சற்று முன் கைகோர்க்க முன்வந்துள்ளனர்.
மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகித்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 191 முன்னாள் உறுப்பினர்களே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு தமது ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ளனர்.
மாத்தறை மாவட்ட பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் 8 பேர் உள்ளிட்ட உப தலைவர்கள் 5 பேரும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதென, சற்று முன்னர் இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் வாக்குறுதி அளித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டையில் இன்று (30) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார வெற்றிக் கூட்டத்தின்போதே, அவர்கள் மேற்கண்டவாறு உறுதி மொழி வழங்கியுள்ளனர்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “எம்மிடம் வாய் வேதாந்தம் இல்லை. பொய் வாக்குறுதிகள் இல்லை. இரண்டு விவாதங்களுக்கும் நாள் குறித்துள்ளேன். நான் விவாதத்திற்குத் தயார். நீங்கள் தயாரா…?” என, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )